கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து வெளியான முக்கிய வீடியோ.! அதிர்ச்சியில் தனுஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தனது அண்ணன் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

நடிகர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டாலும் தன்னுடைய விடாமுயற்சியினால் தற்போது முன்னாடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் வருகிறார் நடிகர் தனுஷ்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு முன்பு வாத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு உருவாகிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்தது.

ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது அந்த வகையில் கடந்த மாதம் வெளியான வாத்தி திரைப்படம் ராசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து ஒரு முக்கிய காட்சி லீகாகி இருப்பதாக கூறப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் உள்ள வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அப்போது படத்தின் போர் தொடர்பான காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். இதனால் படக்குழுவினர் இந்த படத்தில் பணி புரியும் அனைவரிடமும் மொபைல் கேமரா என எதுவும் அனுமதி கிடையாது என கூறிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தனுசு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment