ஆயிரத்தில் ஒருவனில் பார்த்ததை கேப்டன் மில்லர் படத்திலும் எதிர்பார்க்கலாம்.. தரமான அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்.! குஷியில் ரசிகர்கள்

captain-miller
captain-miller

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்துபவர் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹீரோயின்னாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்திப் கிஷன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகின்றனர் மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் கேப்டன் மில்லர் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அதேசமயம் இந்த படத்தில் ஆக்ஷன்க்கு பஞ்சம் இல்லை என தெரியவந்துள்ளது இது ஒரு பக்கம் இருக்க.. மறுப்பக்கம் அதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஷூட்டிங் புகைப்படம் மற்றும் வீடியோ தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.  இந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து தான்.

பணியாற்றும் படங்களின் அப்டேட்களை அவரே முன்வந்து கொடுப்பார் அதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதுபோல தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட் அவர் கொடுத்துள்ளார் தனது ட்விட்டர் பக்கத்தில் சொல்லி உள்ளது என்னவென்றால்..  ஆயிரத்தில் ஒருவனில் இடம் பெற்ற “செலிப்ரேஷன் ஆஃப் லைஃப்” என்கின்ற பிஜிஎமிக்கு பிறகு கேப்டன் மில்லர்..

படத்திற்காக மூன்று, நான்கு பிஜிஎம்கள் இசை அமைத்துள்ளேன். அனைத்தும் வேற லெவலில் வந்திருக்கிறது என கூறியுள்ளார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதைக் கேட்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம் சீக்கிரம் வெளியிடுங்கள் என கூறி கமாண்ட் அடித்து லைக் அள்ளி வீசி வருகின்றனர். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

captain-miller
captain-miller