ajith-selfie

செல்பி எடுத்த ரசிகரின் போனை பிடுங்கி அஜித் என்ன செய்தார் தெரியுமா.? இதோ வீடியோவுடன்.!! எப்பொழுதும் தல தல தான்.

தல அஜித் ஜனநாயக கடமையை சரியாக செய்பவர்என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் திரைப்பிரபலங்களான விஜய், கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், கமல் போன்றோர் போல் இவரும் காலையிலேயே தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்கினை பதிவிட்டார்.

அப்படி வரிசையில் நிற்க்கும் போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது கோபமடைந்த தல அஜித் அவரது செல்போனை பிடுங்கி உள்ளார்.

மேலும் செல்போனைப் பிடுங்கிய தல அஜித் பிறகு அவரிடம் மீண்டும் கொடுக்கும்போது கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிய வேண்டும் என அஜித் ரசிகரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தல அஜித் கோபம் ஆனதற்கு காரணம் அவர் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்பி எடுத்தால் தான் என்பது இந்த வீடியோவை பார்த்த பின்பு தெளிவாக தெரிந்தது.

எனவே ரசிகர்கள் எப்போதும் தல தலதான் என அவரை பாராட்டி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.