27 வயதில் கொரோனா மூளைக்கட்டி என உயிருக்கு போராடும் நடிகை..!! அட கொடுமைய..

0

கொரோனா என்ற ஒன்று எப்பொழுது ஆரம்பித்ததோ அதிலிருந்து உலகம் முழுவதும் முழுமையாக முடங்கி கிடைக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பல கோடி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள் அதுவும் முக்கியமாக சமீப காலங்களாக திரைவுலகில் இறந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருந்து வருகிறார்கள் எனவே திரை பிரபலங்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

பொதுவாக இந்த கொரோனா ஒரு மனிதருக்கு உடலில் புற்று நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் இருந்தால் அந்த நபரை கொரோனவில் இருந்து காப்பாற்றுவது மிகவும் கடினம். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தமிழ் பட நடிகை ஒருவருக்கு மூளைக்கட்டி இருக்கும் நிலையில் தற்போது கொரோனவும் பாதித்துள்ளது.

அந்த நடிகையை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இவரின் தோழிகள் ரசிகர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி உள்ளார்கள் எனவே பெரும்பாலான ரசிகர்களை பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அந்த நடிகை வேறுயாருமில்லை 2012ஆம் ஆண்டு வெளிவந்த பச்சை என்கின்ற காத்து  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா சசி.

இவர் தமிழில் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் ஒரு சிறந்த நடிகை ஆவார்.இவருக்கு மலையாளத்தில்  தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது அதோடு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார்.இப்படிப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்புதான் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக தெரியவந்தது எனவே இதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 11 முறை அறுவை சிகிச்சை செய்து விட்டாராம்.

saranya sasi
saranya sasi

எனவே இதிலிருந்து இவர் குணமடைய வேண்டும் என்பதற்காக பல நடிகர் நடிகைகளும் பணம் கொடுத்து உதவி செய்து வந்தார்களாம் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவருக்கு கொரோனா தோற்றம் உறுதியாகி உள்ளது. 27 வயது மட்டுமே ஆகும் இவருக்கு மூச்சுவிடுவதில் மிகவும் கஷ்டமாக இருப்பதால் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளதாம். எப்படியாவது இவர் இந்த நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் வரவேண்டும் என்று ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.