பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் திடிர் மரணம்.! சோகத்தில் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ..

விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தான் தற்போது விஜய் டிவியை டிஆர்பி ரேட்டிங்கில் தூக்கிக்விடுகிறது அந்த அளவிற்கு இதற்கு ரசிகர்கள் உள்ளனர்.

பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் அப்பாவாக நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் அவர்கள் இன்று மதியம் இரண்டு முப்பது மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

samayam-tamil-jpg
samayam-tamil-jpg

மேலும் இவர் இதற்கு முன் சரவணன் மீனாட்சி சீரியலில் ரட்சிதா மகாலட்சுமிக்கு அப்பாவாக நடித்துள்ளார்,அதுமட்டுமல்லாமல் இவர் ஈரமான ரோஜா சீரியலிலும் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vengadesh
vengadesh

இவரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் நடிகைகள், விஜய்டிவி பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருமே தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment