gp-muthu

இந்த சீசனின் நாரதர் ஜிபி முத்து தான்.! என அடுத்தடுத்த பிரச்சனையை உண்டாக்கும் பிரபலம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் துவங்கப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் எப்பொழுதும் போல மிகவும் அருமையாக தொகுத்து வழங்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்றிலிருந்து ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது அதாவது நேற்று டீ போடுவது தொடர்பாக பிரச்சனைகள் வெடித்தது இன்று சாம்பார் செய்வது தொடர்பாக சண்டை ஆரம்பித்துள்ளது. அதாவது மகாலட்சுமி மற்றும் தனலட்சுமி ஆகியோர்கள் எப்படி சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பதை இரண்டாவது ப்ரோமோவாக விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

மேலும் இதனை தொடர்ந்து மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கும் நிலை எல்லா அதில் ஜிபி முத்து தான் இந்த வீட்டில் நாரதர் வேலை பார்க்கிறார் என தனலட்சுமி தூரத்தில் நின்று கேமரா ‌முன் கூறி இருக்கிறார். இதன் காரணமாக இனி வரும் நாட்களில் ஜிபி முத்து மற்றும் மகாலட்சுமிக்கு இடையே பிரச்சனை வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த ப்ரோமோவின் மூலம் தெரிய வருகிறது.

மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் மிகவும் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தற்பொழுது வரையிலும் இல்லாத அளவிற்கு 20 போட்டியாளர்களை களமிறக்கி இருக்கிறார்கள் மேலும் அந்த 20 போட்டியாளர்களுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் தான்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விடும் கிரண் பங்கு பெற இருப்பதாகவும் இவருக்கு ஒரு நாளைக்கு 1.5 லட்சம் சம்பளம் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

bigg-boss-6

முதல் நாளே ஜிபி முத்துவை கதிகலங்க வைத்த போட்டியாளர்கள்.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான சர்ச்சைக்குரிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் யூடியூப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஜி பி முத்து இவரை கத்தி பயமுறுததி அலறவிடும் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

மற்ற சீசன்களை விட இந்த சீசன் மிகவும் திரில்லிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதிலும் முக்கியமாக ஜிபி முத்து தான் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் பார்த்து வருகிறார்கள் மேலும் அதே போல் ஜிபி முத்து கமலஹாசனை ஒரே ஒரு கேள்வி கேட்டு வாயடைக்க செய்தார்.

மேலும் இன்று பிக்பாஸ் வீட்டில் vibe வருகிறார் அதாவது சக போட்டியாளர்கள் ஜி பி முத்துவை இன்று வச்சி செய்து வருகிறார்கள் அதாவது இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் ஜிபி முத்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சக போட்டியாளர்கள் பயமுறுத்தும் காட்சிகளம் அதற்கு அவர் அலறி அடித்த ஓடும்படியான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

பிறகு ஒரு கட்டத்தில் டென்ஷனாக ஜே பி முத்து மழையில் நனைந்தபடி குத்தாட்டம் போடுகிறார் இவ்வாறு கோபத்தை தணிப்பதற்காக ஜெபி முத்துவின் இந்த காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து ஜீபு முத்துவை கலாய்த்து வருகிறார்கள்.