பிக் பாஸ் அதிகாரபூர்வ தேதியை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்…

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியல் கிஷோர்கள் நடைபெற்று வருகிறது அதில் மிகவும் முன்னிலையில் இருக்கக்கூடிய ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாலம் உண்டு. அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வெள்ளித் திரையில் பல சாதனைகளை படைத்த சின்னத்திரையில் முதன் முறையாக தொகுப்பாளர் அவதாரங்கள் எடுத்த உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை பிக்பாஸ் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 24  மணி நேரம் ஒளிபரப்பாகும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் ஒளிபரப்பானது இதை நட்சத்திர நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து ஒருவர் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விக்ரம் படப்பாடியில் கமல்ஹாசன்  வீடு ஒன்னு இருந்தா என ஸ்டைலாக கலக்கிய பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி எப்போ தொடங்க உள்ளது என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிறு மாலை 6:00 மணி முதல் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்பிரியா செல்ல உள்ளதா கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் டிடி என்கிற திவ்யதர்ஷினி, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்ல உள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பிக் பாஸ் சீசன் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment