விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. எனவே இதனால் இதற்கு மேல் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேற இருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது வெண்பா எப்படியாவது பாரதியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என பெரிய டிராமா நடத்திய நிலையில் இதனால் சௌந்தர்யா தனது மகன் பாரதியை உனக்கு கல்யாணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். எனவே இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து விட இதனால் பாதிப்படைந்த கண்ணம்மா மிகவும் வருத்தமாக இருக்கிறார்.
ஆனால் வேறு வழி இல்லாமல் இதனை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற நிலையில் ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மாவை கோவிலுக்கு அழைத்து வந்து உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். எனவே கோவிலில் வைத்து தாலி கட்ட இதனை வெண்பா, சௌந்தர்யா என அனைவரும் பார்த்து அதிர்ச்சடைகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தாலி கட்டியவுடன் சௌந்தர்யா நிறுத்து பாரதி என சொல்ல பிறகு வெண்பாவின் அம்மா அடப்பாவி என்னுடைய பொண்ணின் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியே டா என சொல்ல அதற்கு சௌந்தர்யா எல்லாரும் முன்னாடியும் என்னுடைய மூஞ்சில் கறியை பூசிடியே டா எனக் கூறிவிட்டு பிறகு என்னுடைய பிள்ளையை வளச்சி போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டியே உன்னை என்ன பண்றான் பாரு என அரைவதற்காக கையை ஓங்க பாரதி சௌந்தர்யாவின் கையை பிடித்து விடுகிறார்.
அம்மா அவ என்னுடைய பொண்டாட்டி என்ன சொல்ல அதற்கு சௌந்தர்யா இந்த நிமிஷத்திலிருந்து நீ எனக்கு பையனும் இல்ல நான் உனக்கு அம்மாவும் இல்லை இவளை கூட்டிட்டு வீட்டு பக்கம் வந்துடாத அப்படி மீறி வந்தால் என்னுடைய பிணத்தை தான் பார்ப்ப எனக் கூற அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.