கண்ணமாவை ஆட்டி படைக்கும் மனசாட்சி.! தொடர்ந்து மயங்குகி விழும் பாரதி..

0
bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலின் தற்போது பாரதிக்கு பழைய நினைவுகள் மறந்துள்ள நிலையில் அவரை குணப்படுத்த வேண்டும் என கண்ணம்மா மற்றும் அவருடைய குடும்பத்தினர்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா முன்பு கண்ணம்மாவின் மனசாட்சி உனக்கு பாரதியின் மீது காதல் வந்துவிட்டது என சொல்ல அப்படி எதுவும் இல்லையா சத்தம் போடுகிறார்.

இதனை அடுத்து பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பாரதியிடம் காரை கொடுத்து அவரை அனுப்பி வைத்து வழியில் கண்ணம்மா லிஃப்ட் கேட்க பிறகு சீட் பெல்ட் போட தெரியாது என்பதால் பாரதி கண்ணம்மாவுக்கு சீட் பெல்ட் போட அப்பொழுது அவருக்கு திடீரென பழைய நினைவுகள் வந்து கண்ணம்மா என கூப்பிட உடனே மயங்கி விழுகிறார்.

இதனை அடுத்து சௌந்தர்யா உப்புமா செய்து தர பிறகு இதன் மூலம் பாரதிக்கு நினைவுகள் வருகிறது மறுபடியும் மீண்டு வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் கண்ணம்மாவின் முன்பு மனசாட்சி தோன்றிய பாரதி உன்ன எப்படி காதலிக்கிறார் என்பதை பார்த்துக் கொள்ள என சொல்ல நான் யாரையும் ஏற்றுக் கொள்ளவும் போறது இல்லை மன்னிக்கப் போறவன் இல்லை என அடம்பிடிக்கிறார்.

மறுபுறம் சௌந்தர்யா ஹேமா லக்ஷ்மி இருவருடன் கோவிலுக்கு செல்கிறார் அப்பொழுது அங்கு இருவரும் அப்பாவை எப்படியாவது குணப்படுத்தி விடுங்க எங்களுக்கு அப்பாவை இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது பழைய அப்பா வேண்டும் என சொல்ல கண்டிப்பா பாரதி பழையபடி உங்க கிட்ட சந்தோஷமா பேசி பழகுவான் இது நடக்கும் என சௌந்தர்யா கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோட் விரைவடைகிறது.

இவ்வாறு கிளைமாக்ஸ் நோக்கி சில காலங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் எப்பொழுது பாரதி கண்ணம்மா சீரியல் முடியும் என ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகிறார்கள் இதன் காரணமாக பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனரை கழுவி ஊற்றி வருகின்றனர்.