பாரதிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு.! விரைவில் குணப்படுத்துவதற்காக கணபதி போட்ட திட்டம்..

0
bharathikannajma
bharathikannajma

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதி தன்னுடைய பழைய நினைவுகளை மறந்துள்ளார் எனவே அவரை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் முயற்சி செய்து வருகிறார். மேலும் கண்ணம்மா பாரதியை குணப்படுத்த வேண்டும் என பழைய கண்ணம்மாவாக மாறி உள்ளார்.

இந்த சீரியலில் இன்று எபிசோடில் சௌந்தர்யா, லட்சுமி, கணபதி ஆகியவர்கள் கோவிலில் இருக்க அப்பொழுது லெட்டர் ஒன்றுடன் அகிலன் வருகிறார். மேலும் அதில் பாரதிக்கு வெளிநாட்டில் யூனிவர்சிட்டி ஹார்ட் சர்ஜனாக வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே எப்படியாவது பாரதியை விரைவில் குணப்படுத்த வேண்டும் என முடிவு செய்கின்றனர்.

அதோட மட்டுமல்லாமல் யூனிவர்சிட்டியில் எந்த ஒரு பணமும் கட்டாமல் மேல்படிப்பும் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே சௌந்தர்யா கண்ணம்மாவை சந்தித்து அனைத்து விஷயங்களையும் பிறகு அடுத்ததாக கணேசன் அகிலனிடம் கண்ணம்மா தன்னை சந்தித்ததாகவும் அப்பொழுது நான் ஒரு ஐடியா சொல்லி இருக்கேன் எனவும் திட்டத்தை கூறுகிறார்.

அதன் பிறகு இருவரும் சென்று பாரதியிடம் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது கண்ணம்மா என்பவர் தான் உன்னுடைய மனைவி என அவரது காதல் கதையை சொல்கிறார் பிறகு பாரதிக்கு கண்ணம்மா போன் செய்து என்ன மறந்துட்டீங்களா என சொல்ல இல்லை எனக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு எல்லாத்தையும் மறந்து விட்டேன் என கூறுகிறார். பிறகு கண்ணம்மா நாளைக்கு உங்களுக்கு பிறந்தநாள் உங்களை சந்திக்க தேவைப்பட்டினம் பீச்சுக்கு வரேன் நீங்களும் வந்துடுங்க உங்ககிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும் என கூறுகிறார்.

இதனால் பாரதி கண்ணம்மா என்ன விஷயம் சொல்லப் போகிறார் என மிகவும் சந்தோஷமாக ஆவலுடன் எதிர்பார்க்க இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இதன் மூலம் பாரதிக்கு பழைய நினைவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி பல மாதங்களாக ஒரு பரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் கடுப்பிலிருந்து வருகிறார்கள்.