பியானோவும் நானும்!! சிரிக்காதே, என்ற பாடலுக்கு பியானோ வாசித்து வீடியோ வெளியிட்ட அனிருத்.!

Anirudh_Ravichander_tamil360newz.jpg

Piano and I !! Anirudh playing the piano for the song ‘sirikathey’ from remo: அனிருத் இவர் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற ஒற்றை பாடலைப் பாடி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். மேலும் ஆரம்ப காலத்தில் இவர் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த திரைப்படங்களில் மட்டும் இசையமைத்து வந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது இவர் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். பின்னர் இவர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான்,  ரெமோ, கோலமாவு கோகிலா போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுதும் பரவி வரும் கோரானா வைரஸின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்தபடியே தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரெமோ படத்தில் அவர் பாடிய சிரிக்காதே என்ற பாடலுக்கு பியானோ வாசிக்கிறார். மேலும் “பியானோவும் நானும்… நாங்கள் இருவர் மட்டும் தான்” என அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பியானோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

இரண்டு கைகளே இல்லாமல் வாத்தி கம்மிங்க் பாடலுக்கு ட்யூன் போடும் ரசிகர்.! அனிருத் வெளியிட்ட எமோஷனல் வீடியோ

master-tamil360newz

video on vijay master movie vathi comming song tune play by handless fan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், சமீபகாலமாக விஜயின் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் சாதனையும் நிகழ்த்தி வருகிறது.

அதனாலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக வேண்டியது. ஆனால் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் போஸ்டர்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதுவும் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், இந்தப் பாடலுக்கு பல ரசிகர்கள் டிக் டாக் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார்கள், இந்தநிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் இந்தப் பாடலுக்கு டியூன் போட்டு உள்ளார்.

இந்த வீடியோவை அனிரூத் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அதிக அளவு ஷேர் செய்தும் வருகிறார்கள்.

முகேன் ராவின் அறிவும் அன்பும் என்ற ஆல்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் நாளை வெளியிடுகிறார்!!

kamal haasan

விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் அறிமுகமானவர் முகேன் ராவ். மேலும் இவர் பாஸ் சீசன்3 ல் வெற்றி பெற்றவர். இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவருக்கு பெண்கள் ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளது. உள்ளே உள்ள போட்டியாளர்களில் இவர் தான் மிகவும் எளிமையாகவும் மற்றவரிடம் அன்புடனும் நடந்து கொண்டார். இவர் சொன்ன அன்பு மட்டும் அனாதை என்கின்ற வார்த்தை அனைவரையும் கவர்ந்தது. இவர் குறும்படம் இயக்குவது பாடல் நடனம் என … Read more

வாத்தி கம்மிங் பாடலை சரமாரியாக கிண்டல் செய்தவருக்கு தரமான பதிலடி கொடுத்த அனிருத்.

aniruth

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும், எனப் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் … Read more