வாத்தி கம்மிங் பாடலை சரமாரியாக கிண்டல் செய்தவருக்கு தரமான பதிலடி கொடுத்த அனிருத்.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும், எனப் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் வைரல் ஆன நிலையில், தற்பொழுது வாத்தி கம்மிங் என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் சாதனை படைத்து வருகிறது.

ஆனால் நெகட்டிவ் விமர்சனம் அதிகமாக வந்தது, இந்த பாடலை அனிருத் நடனமாடுவதை பலரும் கிண்டல் செய்தார்கள், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அனிருத் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அனிரூத் மீண்டும் ஆடி பதிலடி கொடுத்துள்ளார் இதோ அந்த வீடியோ.

Leave a Comment