பியானோவும் நானும்!! சிரிக்காதே, என்ற பாடலுக்கு பியானோ வாசித்து வீடியோ வெளியிட்ட அனிருத்.!

0

Piano and I !! Anirudh playing the piano for the song ‘sirikathey’ from remo: அனிருத் இவர் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற ஒற்றை பாடலைப் பாடி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். மேலும் ஆரம்ப காலத்தில் இவர் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த திரைப்படங்களில் மட்டும் இசையமைத்து வந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது இவர் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். பின்னர் இவர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான்,  ரெமோ, கோலமாவு கோகிலா போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுதும் பரவி வரும் கோரானா வைரஸின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்தபடியே தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரெமோ படத்தில் அவர் பாடிய சிரிக்காதே என்ற பாடலுக்கு பியானோ வாசிக்கிறார். மேலும் “பியானோவும் நானும்… நாங்கள் இருவர் மட்டும் தான்” என அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பியானோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.