kushi

10 வயதிலேயே பிசினெஸ் ஆரம்பித்த விஜய் பட நடிகையின் மகன்.! வாழ்த்தும் ரசிகர்கள்

தற்பொழுதெல்லாம் குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் இவர்களுடைய திறமைகளை பார்த்து பலரும் வியந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல நடிகை ஒருவரின் மகன் தன்னுடைய பத்து வயதில் பிசினஸ் தொடங்கியுள்ள தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரீச்சினை பெற்று வருகிறது.

மேலும் பிசினஸில் தயாராகிய அந்த முதல் தயாரிப்பை நடிகையே வாங்கி தன்னுடைய மகனை ஊக்குவித்துள்ளார். அதாவது பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜய் நடிப்பில் வெளியான குஷி ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலம்க்ஷடைந்தவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி.தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் ஐபிஎல் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் என்பது மட்டுமின்றி பல பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் இவருடைய மகன் 10 வயதாகும் விஷான் தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்‌.மேலும் இதனை பற்றி ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார். அதாவது VRKICKS என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் மூலம் பிரத்தியோகமான ஷூக்கள் தயாரித்து விஷான் விற்பனை செய்து வருகிறார்.

எனவே தன்னுடைய மகன் சின்ன வயதிலேயே தொழிலதிபராக மாறிவுள்ள தன்னுடைய மகனை ஊக்குவிக்கும் வகையில் மகன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் ஹூவை ஷில்பா ஷெட்டியே வாங்கி உள்ளார்.இது குறித்த புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தில் தன்னுடைய மகனுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

shilpa shetty
shilpa shetty

அதாவது ஷில்பா ஷெட்டி கூறியதாவது ‘சிறு குழந்தைகளுக்கு அவர்களின் பெரிய கனவுகளும் எப்பொழுதும் மூக்குவிக்கப்பட வேண்டும் அந்தத் தொழிலின் முயற்சி யோசனை மற்றும் கருத்து, வடிவமைப்புகள் அனைத்தும் அவர்தான் தொழில் முனைவோர்களுக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த இளமைப் பருவத்தில் கிடைக்கும் வருமானத்தில் சிலவற்றைத் தொண்டு நிறுவனத்திற்காக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.அவருக்கு வயது பெறும் 10 இந்த தலைமுறை அம்மாவை ஆச்சரியப்படுத்தி உள்ளார் மிகவும் பெருமை,ஆல் தி பெஸ்ட் என் மகனே’என பதிவிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

shilpa-shetty

மாலத்தீவில் பிகினியில் இணையதளத்தை கதறவிடும் விஜய் பட நடிகை. ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள்..

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற குஷி திரைப்படத்தில் மெக்கோரினா என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரிதாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்.இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவருக்கு தற்போது வரையிலும் 40 வயதை கடந்த போதும் ஓயாமல் யோகா, டயட்,எக்சசைஸ் என பல செயல்களை செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கும் டப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார்.

இந்நிலையில் ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்க கடற்கரையில் பிகினி உடையில் ஒய்யாரமாக நடந்துசெல்லும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டதை என்பதை நம்பவே முடியவில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.