அழகுக்கு அழகு சேர்க்க ஆப்ரேஷன் செய்து கொண்ட 5 நடிகைகள்.. சோகத்தில் முடிந்த ஸ்ரீதேவியின் சினிமா பயணம்

நடிகைகள் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க திறமை மட்டும் போதாது அழகும் தேவை ஒரு சில நடிகைகள் ரொம்ப அழகாக இருக்க சர்ஜரி செய்து மெழுகு பொம்மை போல் மாறி உள்ளார்கள் அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

ஹன்சிகா : குட்டி குஷ்பூ என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஹன்சிகா தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்  இப்படிப்பட்ட ஹன்சிகா மேலும் பட வாய்ப்பு அள்ள ரொம்ப அழகாக இருக்க வேண்டிய அவசியம் என கருதி முகத்தில் சர்ஜரி செய்து கொண்டார்.

Bigg Boss 7 : வீட்டில் யாரும் எதிர்பாராத நிகழ்வு.. நாமினேஷனில் இருக்கும் 6 போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்..

ஸ்ரேயா : முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஸ்ரேயா.. பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென உதடு, மூக்கு பாகங்களை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

ஸ்ரீதேவி : திரை உலகில் எத்தனையோ சாதித்த நடிகைகள் இருந்தாலும் ஸ்ரீதேவியின் புகழ் மட்டும் இன்றளவும் குறைந்தபடு இல்லை.. அந்த அளவிற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்து வெற்றிகளை மட்டுமே அள்ளிய இவர் இளமையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக அதுக்கு ஏத்த மாதிரி உணவுகளை எடுத்துக் கொண்டார். மேலும் அதிக மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்தார் அதுவே கடைசியில் அவருக்கு பிரச்சனையாக முடிந்தது ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.

Bigg Boss 7 : வீட்டில் யாரும் எதிர்பாராத நிகழ்வு.. நாமினேஷனில் இருக்கும் 6 போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்..

ஸ்ருதிஹாசன் : கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்  ஏழாம் அறிவு படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் ரொம்ப அழகு இன்னும் அழகாக இருக்க  அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஷில்பா ஷெட்டி  : பாலிவுட் நடிகையான இவர் தமிழில் குஷி படத்தில் நடித்திருந்தார். சும்மாவே செம அழகாக இருக்கும் ஷில்பா ஷெட்டி  இன்னும் அழகாக மாற மூக்கு, உதடு, கண் இமை அனைத்தையும் சர்ஜரி செய்து இருந்தார்.