Bigg Boss 7 : வீட்டில் யாரும் எதிர்பாராத நிகழ்வு.. நாமினேஷனில் இருக்கும் 6 போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்..

Bigg Boss 7 Tamil today promo 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் முற்றிலும் மாறுபாட்டுடன் புதிய விதிமுறைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு பிரபலம் வெளியேறி உள்ளார்.

70 நாட்களைக் கடந்து 13 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி புதிய டாஸ்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது அப்படி நாள்தோறும் ஏராளமான டாஸ்க்களில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய டஃப்பை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

ஜல்சா பண்ண ஒரு லட்சம் கொடுத்தியே மறந்திட்டியா.. நீ எல்லாம் என்னை பத்தி பேசலாமா.! பிரபல நடிகரின் வண்டவாளத்தை தோலுரித்துக் காட்டிய பிரபலம்.!

இதில் சிறப்பாக விளையாடியவர்களாக அர்ச்சனா, தினேஷ் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளனர். கிராண்ட் பின்னாலே செல்வதற்கான வாய்ப்பை அர்ச்சனா இழந்திருப்பதனால் அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பூர்ணிமாவுக்கு விட்டு கொடுக்கிறார். இதனால் மாயா கடுப்பானதையும் இரண்டாவது ப்ரோமோவில் பார்த்தோம்.

தற்பொழுது வெளியாகி இருக்கும் 3வது ப்ரோமோவில் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் 6 பேரில் உடனடியாக ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். பிக் பாஸ் இல்லத்தில் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வு மீட் வீக் எவிக்சன் இந்த சீசனில் முதன் முறையாக நடைபெறுவதாக கூறுகிறார் பிக் பாஸ்.

ரஜினி மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது வாயா.. போயா.. என கூப்பிட்ட கவுண்டமணி.. சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி

எனவே நாமினேட்டான தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு ஆகிய ஆறு பேருக்கும் போர்டில் அவர்களுடைய பெயர் போட்ட போட்டோ வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைவருடைய புகைப்படத்தையும் சேர்க்கும்போது யாருடையது சரியாக பொருந்தவில்லையோ அவர் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.