துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் தெறிக்க வெளியானது பீஸ்ட் ட்ரைலர்.!

beast

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு  செல்வராகவன், அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அனிருத் இசையில் உருவாகியுள்ள  பீஸ்ட்  திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. கொரோனா காரணமாக இசை வெளியீட்டு விழா பீஸ்ட் திரைப்படத்திற்கு நடத்த முடியாமல் போனது அதனால் சன் தொலைக்காட்சியில் பீஸ்ட் படக்குழு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அந்த நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியை நெல்சன் தான் தொகுத்து வழங்கியுள்ளார் எனவும் அப்பொழுது விஜயிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்டுள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதேபோல் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதால் இரண்டு திரைப்படங்களுக்கும் கடும் போட்டி நிலவி வரும். இதற்கு முன் கேஜிஎப் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது படக்குழு.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை தற்போது சன் பிக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 மணி நேரத்தில் அதிக லைக் பெற்ற டிரைலர் எது தெரியுமா.? முதல் இடத்தில் இந்த ஹீரோ படமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

actors

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து மக்களைக் கவர்கின்றன ஆனால் அந்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் …

Read more

ராகவா லாரன்ஸ் மற்றும் அக்ஷய் குமார் நடித்துள்ள லட்சுமிபாம் திரைப்படத்தின் டிரைலர் இதோ.! ஆனா இது காஞ்சனா மாதிரி இல்லையே என கூறும் ரசிகர்கள்

laxmmi bomb

தமிழ் சினிமாவில் பேய் படங்களை இயக்கி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ராகவா லாரன்ஸ். இவர் பேய் திரைப்படத்தை நகைச்சுவை கலந்து இயக்கி வெளியிட்டு கல்லா கட்டியவர்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகிய முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. காஞ்சனா திரை படத்தை எத்தனை முறை ஒளிபரப்பினாளும் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

அப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி யிலும் நல்ல இடத்தைப் பிடித்தது, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா சீரியஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் இந்த திரைப் படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடித்துள்ளார்.

ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் மற்றும் கீர அத்வானி நடித்த லட்சுமி பாம் திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த ட்ரெய்லர்.

4 நாட்களில் மில்லியன் பார்வைகளை கடந்த அடல்ட் படம்.! தயவுசெய்து 18+ மட்டும் பார்க்கவும் உச்ச கட்ட காட்சிகள்.!

thriller

Thriller trailer :  இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், இவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர், தற்பொழுது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு கடைபிடிக்கப்பட்ட வருவதால் எந்த ஒரு படபிடிப்பும் நடைபெறாமல் திரையுலகமே முடங்கிக் கிடக்கிறது.

இந்தநிலையில் சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா ஊரடங்கு  காலத்தில் சில நிமிடங்கள் கொண்ட கவர்ச்சி குறும்படங்களை அடல்ட் வயதினருக்கான எடுத்து தன்னுடைய யூடியூப் தளத்தில் வெளியிட்டு வசூல் அள்ளி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நேக்குடு என்ற பெயரில் வெளியான திரைப்படம் நல்ல வசூல் செய்தது இதற்குமுன் கிளைமாக்ஸ் பவர்ஸ்டார் ஆகிய திரைப்படங்களை இயக்கி சர்ச்சைகளில் சிக்கினார் அந்த வகையில் தற்போது தன்னுடைய அடுத்த படைப்பான திரில்லர் என்ற திரைப்படத்தை வெளியிட இருக்கிறாராம்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியானது, இந்த டிரைலர் வெளியாகி நான்கு நாட்களில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது, படத்தில் அக்ஷரா ராணி என்ற நடிகையும் ராக் கச்சி என்ற நடிகரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்தப்படத்தில் மிகவும் கிளாமர் காட்சிகளும் மோசமான வசனங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.

ஆக்ஷனில் பின்னி பெடலேடுக்கும் நந்திதா ஸ்வேதா இதோ IPC 376 ட்ரைலர்.!

தமிழ் சினிமாவில் முதன் முதலில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா அதன்பிறகு எதிர்நீச்சல், விஜய் சேதுபதியுடன் …

Read more

விஜய் பிறந்தநாளில் விஷால் கொடுத்த ட்ரீட்.! சக்ரா டிரைலர் இதோ.!

vishal chakra

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா திரைப்படத்தில் …

Read more

மிகப்பெரிய சமூக பிரச்சனையை கையில் எடுத்த விஜய் சேதுபதி.! இணையத்தளத்தில் பட்டைய கிளப்பும் கா பே ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர். !

ka pae ranasingam

ka pae ranasingam teaser : இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கா பே ரணசிங்கம், இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் கதை மிகப்பெரிய சமூகப் பிரச்சனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது, அதனால் இந்த திரைப்படத்திற்கு சர்ச்சை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் இன்றைய அரசியலின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் இந்த திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் படும் வைரலாகி வருகிறது டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் போட்டு ஷேர் செய்து வருகிறார்கள்.

போராடி தோத்துடன்னு சொல்றதுக்கு இது கேம் இல்ல.! பொன்மகள் வந்தால் ட்ரைலர் இதோ.!

Ponmagal Vandhal Official Trailer

Ponmagal Vandhal Official Trailer : JJ Fredrick இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள், இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடியாததால் படத்தை அமேசான் நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள் அதனால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஜோதிகா மற்றும் சூரியா மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஜோதிகா மற்றும் சூர்யா திரைப்படங்களை இனி திரையரங்கில் திரையிட மாட்டோம் என சமீபத்தில் வாக்குவாதம் செய்தார்கள்.

இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி அமேசான் பிரைம் மூலம் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.