ஆக்ஷனில் பின்னி பெடலேடுக்கும் நந்திதா ஸ்வேதா இதோ IPC 376 ட்ரைலர்.!

0

தமிழ் சினிமாவில் முதன் முதலில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா அதன்பிறகு எதிர்நீச்சல், விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா, இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா உடன் இணைந்து மதுசுதன், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்கியுள்ளார், அதுமட்டுமில்லாமல் யாதவ் ராமலிங்கம் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார், படத்தை பவர் கிங் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து தற்பொழுது ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளார்கள் படக்குழு.

இந்த ட்ரெய்லரில் நந்திதா ஸ்வேதா மிகவும் மிரட்டலாக நடித்துள்ளார்.