போராடி தோத்துடன்னு சொல்றதுக்கு இது கேம் இல்ல.! பொன்மகள் வந்தால் ட்ரைலர் இதோ.!

0

Ponmagal Vandhal Official Trailer : JJ Fredrick இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள், இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடியாததால் படத்தை அமேசான் நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள் அதனால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஜோதிகா மற்றும் சூரியா மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஜோதிகா மற்றும் சூர்யா திரைப்படங்களை இனி திரையரங்கில் திரையிட மாட்டோம் என சமீபத்தில் வாக்குவாதம் செய்தார்கள்.

இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி அமேசான் பிரைம் மூலம் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.