rejina

சிகரெட் புகை, லிப் கிஸ் மற்றும் படுக்கையறை என புகுந்து விளையாடி இருக்கும் நடிகை சுனைனா.! ‘ரெஜினா’ பட டீசர் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சுனைனா ‘ரெஜினா’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும் திரைக்கு வர இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் சுனைனா, நிவா ஆதிதன், ரிது மந்தரா, ஆனந்த் நாக், தீனா விவேக், பிரசன்னா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சதீஷ் நாயர் என்பவர் இயக்கியிருக்கும் நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விரைவில் ரிலீஸ்சாக தயாராக இருக்கிறது.

இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ஒரு நிமிட காட்சி வெளியாகி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த டீசரில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சுனைனாவின் ஸ்டைல் மற்றும் சிகரெட் புகை மற்றும் படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் நிலையில் சுனைனாவுக்கு திருப்புமுனையாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலங்களாக சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையாமல் இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் மூலம் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வாய்ப்புள்ளது. மேலும் கண்டிப்பாக சுனைனாவின் நடிப்பு இந்த படத்தில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படும்.