vijay

விஜயின் ரொமான்டிக் பாடலுக்கு பிரபலம் ஒருவருடன் ரொமான்ஸ் செய்து வீடியோவை வெளியிட்ட சிவாங்கி.!

சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்த சிவாங்கி தற்பொழுது ரொமான்ஸ் பாடலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சிவாங்கியை இப்படி ஒரு நிலையில் பார்த்ததில்லை எனவே இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் சிவாங்கி.

இவருடைய குரல் பேசும்பொழுது மிகவும் காமெடியாக இருந்த நிலையில் அனைவரும் இவரை கலாய்த்தார்கள் ஆனால் பாட ஆரம்பித்தவுடன் அனைவரும் வாயை பிளந்து பார்த்தார்கள் இவ்வாறு பிரபலம் அடைந்த இவர் பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பணியாற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சிவாங்கி தற்பொழுது திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வந்தார். இவர் பிரபல பின்னணி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். மேலும் சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் பாதியிலேயே எலிமினேட்டாகி இருந்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

அதன் பிறகு தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்தார். இந்நிலையில் முக்கியமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் சிவாங்கி அவர்களுடைய காம்போ வேற லெவலில் இருந்தது எனவே இவர்களுக்கென தனி ஒரு கும்பலை இருந்தது என்று தான் கூற வேண்டும் இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு சினிமாவில் வளர்ந்து வரும் சிவாங்கி தற்பொழுது ரொமான்ஸ் பாடலின் வீடியோவை தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்

அது ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது அதாவது தற்பொழுது சிவாங்கி விஜய், திரிஷா கூட்டணியில் வெளிவந்த குருவி திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த தேன் தேன் என்ற பாடலை ஹர்ஷவர்தனுடன் இணைந்து பாடியுள்ளார். மேலும் அதோட மட்டுமல்லாமல் ரொமான்டிக்காக சிவாங்கி நடனமாடி இருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்கொலை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..