ஹீரோயின்களுக்கு போட்டியாக களத்தில் குதித்த சூப்பர் சிங்கர் சிவாங்கி.! கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்.. வைரலாகும் ஃபோட்டோ ஷூட் வீடியோ…

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல சிங்கர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பல பாடல்களை பாடி வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கரில் பிரபலமானவர்களில் ஒருவர் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டு வந்தார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமானார். அதிலும் புகழுடன் சேர்ந்து அண்ணன் தங்கை செய்யும் அட்ராசிட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு வரும் குக் வித் கோமாளி 4 சீசனில் குக்காக இருந்து வருகிறார்.

இதை தொடர்ந்து நடிகர் வடிவேலு அவர்கள் நீண்ட வருடங்கள் கழித்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சிவாங்கி அவர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விஜய் தொலைக்காட்சியில் டாப் லிஸ்டில் இருக்கும் சிவாங்கி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மேலும் இவர் பாடும் பாட்டு ரசிகர் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வந்ததை தொடர்ந்து சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற வேண்டும் என்று அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களை ஜோல்லு வடியா வைத்திருக்கிறது.

அதாவது சிவாங்கி ஹீரோயின்களுக்கு போட்டியாக போட்டோ சூட் செய்த வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். ஜொலிக்கும் உடையில் இருக்கும் இவருடைய புகைப்படம் ரசிகர்களை ஜோல்லு வடிய வைத்திருக்கிறது.

இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment