டாப் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்திய குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி – வைரல் வீடியோ இதோ.!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பலரும் பிரபலமடைந்து தற்போது சினிமாவிலும் கால்தடம் பதித்து  பல டாப் ஹீரோக்களின் படங்களில் தனது குரலில் பாடல்களைப் பாடி அசத்தி வருகின்றனர். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியில் அவரது குரல் வளத்தின் மூலம் ரசிகர்கள் பலரையும் கட்டி ஈர்த்தவர் . பின்பு குக் வித் கோமாளி என்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்துகொண்டு தனது கீச்சுக் குரலின் மூலம் காமெடி செய்து மக்கள் மற்றும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தார்.

இந்த குக் வித் கோமாளி முதல் சீசனில் இருந்த தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் வரை பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலங்கள் மத்தியிலும் பிரபலமடைந்த சிவாங்கி சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்துள்ளார்.

இந்த டான் திரைப்படம் வருகின்ற மே 13ம் தேதி அன்று வெளியாகிறது . மேலும் சோசியல் மீடியாவில் வித விதமான உடை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சிவாங்கி. தற்போது சிவாங்கி டாப் நடிகைகளுக்கு நிகராக செம மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்துள்ள புகைப்பட போட்டோ ஷூட் விடியோவை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ஒரு பக்கம் லைக்குகளை தெரிவித்து வந்தாலும் கமெண்ட்களில் டாப் நடிகை போல இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர். இதோ அந்த போட்டோ ஷூட் வீடியோ.