kaavaalaa

வெளியானது சிம்ரன், காஜல் அகர்வாலின் காவாலா வர்ஷன்..! என்ன சிம்ரன் இதெல்லாம் என கேள்வி எழுப்பும் நெட்டிசன்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதில் தமன்னா, ரஜினிகாந்த் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டம், தலைவரின் ஸ்டைல் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது எனவே யூடியூப் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்ட அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. அப்படி சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் சிங்கள் பாடலான காவாலா என்ற பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்த ஆட்டம் போட்ட நிலையில் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இதற்கு பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் நடிகை தமன்னாவும் இதற்கான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லைக் குவிந்தது. அந்த வகையில் தற்போது இந்த பாடலில் முன்னணி நடிகைகளான சிம்ரன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பது போல் தமன்னாவின் வீடியோவில் எடிட் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். சிம்ரனுக்கும் காஜல் அகர்வாலுக்கும் இந்த வீடியோ சிறப்பாக அமைந்திருப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

simran

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே பாடலை சிரித்துக்கொண்டே அழகாக பாடும் சிம்ரன்.! வைரலாகும் வீடியோ.!

தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பல நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் சிம்ரன் இவரது பிறந்த நாளை முன்னிட்டு தற்பொழுது இவருக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவரது ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் நிறைய இவரது வீடியோக்கள்,புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினி,கமல்,அஜித்,விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி போட்டு நடித்து விட்டார் மேலும் இவர் தற்பொழுது சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று கூட கூறலாம்.

இவர் நடித்த திரைப்படங்களில் இவர் நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்நிலையில் சிம்ரன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கும்.

அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் நடிப்பது என்றால் மிகவும் ஆர்வமாக நடிக்கும் குணம் உடையவர் மேலும் இவரது பிறந்த நாளை முன்னிட்டு தற்பொழுது இவரது ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் ஒரு காலத்தில் ஒரு பேட்டி கொடுக்கும்பொழுது அற்புதமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அந்த வீடியோவை எடுத்து இவரது ரசிகர் சமூக வலைதள பக்கங்களில் happy birthday தலைவி என்று டேக் செய்து பதிவு செய்துள்ளார் இதனைப் பார்த்த சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து thank you என்று ரிப்ளை செய்துள்ளார். மேலும் சிம்ரன் மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே பாடலை மிகவும் அழகாக பாடியுள்ளார் இந்த வீடியோ காணொளி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.