நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல இயக்குனரின் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சிம்ரன்.! மேலும் சிறப்பான தகவல் என்ன தெரியுமா.?

பொதுவாக நடிகைகளை பொருத்தவரை என்னதான் இளமை காலகட்டத்தில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொல்லும் அளவிற்கு இவர்களுக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை அப்படி கிடைத்தாலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தான் பலரும் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன் சமீப காலங்களாக பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குனரின் அடுத்த படத்தின் நடிகை சிம்ரன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது எனவே இந்த படம் தமிழில் அவருடைய 50வது படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டுகளில் நடிகை சிம்ரன் அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமானார். இந்நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சப்தம் என்ற புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரம் பாட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் சப்தம் படத்தில் தான் சிம்ரன் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படம் தமிழில் சிம்ரனின் ஐம்பதாவது படம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஆதி ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். மேலும் இவர்களைத் தொடர்ந்து லைலா, ரெடி கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தை நடித்து வரும் நிலையில் தற்போது சிம்ரனும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

simran
simran

இந்த படத்தினை 7 ஜி ஃபிலிம்ஸ் சிவா மற்றும் ஆல்பா பிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிம்ரனின் நடிப்பில் நீண்ட வருடங்கள் கழித்து இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

Leave a Comment