biggboss-samyuktha

பிக்பாஸ் சம்யுக்தா சீரியலில் நடித்துள்ளாரா.! வைரலாகும் சீரியல் காட்சி

biggboss samyuktha karthik acted in sun tv serial with radhika sarathkumar video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர் தான் மாடலும், பிசினஸ் உமனுமான நடிகை சம்யுக்தா கார்த்திக்.

இவர் நடிகை ராதிகா சரத்குமார் உடன் இணைந்து சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியல் சன் டிவியில் மிக குறுகிய நாட்களில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு பின்பு  நிறுத்தப்பட்டது என தெரியவருகிறது. அதனை தொடர்ந்து இந்த சீரியல் சூர்யா டிவியில் ஒளிபரப்பானது என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இதனால் ஆரியுடன் பல பிரச்சினைகள் ஏற்பட்டு தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த வீட்டில் நியாயமில்லை என கூறியும் கமல் கூறியபடி தான் ஒரு கை பொம்மையாக  இருந்து விட்டோமா எனவும் கேப்டனாக  இருந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறி வருகிறார்.

மேலும் இவர் நடித்த சீரியலிலிருந்து ஒரு காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.