மீராமிதுனை போல் இந்த சீசனில் கலமிறங்கும் சென்னை மாடல் அழகி!! வைரலாகும் புகைப்படம்.

0

biggboss new contestant like meeramithun this season chennai model photo: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி நம் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசன் அக்டோபர் மாதம் நான்காம் தேதி தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், கிரண் ரத்தோட், ஆஜித், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சஞ்சனா ஷெட்டி, பாடகர் வேல்முருகன், லட்சுமிமேனன், அம்ரிதா ஐயர், ஷாலு ஷம்மு, அனுமோகன் போன்றவர்கள் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிய வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து பங்கேற்பாளர்களையும் சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளார்கள். இந்நிலையில் சென்னை மாடல் அழகி ஒருவர் கலந்துகொள்ளப் போவதாக தெரியவந்துள்ளது.

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான சந்திரகுமாரி சீரியலில் சம்யுக்தா என்ற நடிகை நடித்துள்ளார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலத்தில் இவருக்கு சென்னை மாடல் அழகி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் பிக் பாஸில் நடிக்கப் போகிறார் என்பதும், தற்போது இவரும் சென்னை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
பிக் பாஸ் சென்ற சீசன்களில் மீராமிதுன் போன்ற ஒரு சில மாடல் அழகிகள் நடித்துள்ளார்கள். தற்போது பிக் பாஸ் சீசன் 4ல் சம்யுக்தா கார்த்திக் என்ற சென்னை மாடல் அழகி நடிக்க உள்ளார் என்பது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

samyuktha 1
samyuktha 1
Actress-Samyuktha-Karthik
Actress-Samyuktha-Karthik