முன்னணி நடிகரின் திரைப்படத்தில் இணைந்த பிக் பாஸ் சம்யுக்த்தா.!!

சம்யுக்தா கார்த்திக் பிக் பிக் பாஸ் சீசன் 4கில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். அதுமட்டுமல்லாமல் இவரின் அழகும் அனைவரையும் ஈர்த்தது. பின்னர் அதனை தொடர்ந்து 56வது நாளில்  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர் ஒரு மாடலாக பிரபலமானவர். பின்னர் அதனைத் தொடர்ந்து சந்திரகுமாரி என்ற சீரியலில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒரு நடிகையாக தன்னை நிரூபித்தார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த பின்னர் இவர் பிக் பாஸ் வீட்டில் தனது அனுபவத்தைப் பற்றி பேட்டியில் சிறப்பாக கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது இவர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Samyuktha
Samyuktha

Leave a Comment