பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதிகண்ணம்மா.இந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காவியா. இந்த சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்திரா எதிர்பாராதவிதமாக இறந்ததால் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவிற்கு பதிலாக காவியா நடிக்கத் தொடங்கினார்.
காவியா முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள். அதன் பிறகு இவரின் சிறந்த நடிப்பினாளும் தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியானா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் செட்டில் பேசுவது போன்றவற்றை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்பொழுது நடிகை வாணி போஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருவதால் படப்பிடிப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் காவியா.
தற்பொழுது காவியா நயன்தாரா போல் ஆடை அணிந்து நடனமாடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.