kandhara

பக்கா பிளான் போட்டு தமிழில் ‘காந்தாரா’ படத்தினை வெளியிட்ட படக் குழுவினர்கள்.! ட்ரெய்லர் இதோ..

பொதுவாக ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகு அதனை மற்ற மொழிகளில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் எந்த ஒரு கதை மிகவும் நன்றாக இருப்பதாக தோன்றுகிறதோ  கண்டிப்பாக இந்த கதை படமாக்கப்பட்டால் அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆகும் என நினைத்து ஒரே படத்தினை மற்ற மொழிகளிலும் அதே கதை அம்சத்துடன் ஒளிபரப்புவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

அந்த வகையில் கன்னட சினிமாவில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் காந்தாரா. இந்த திரைப்படம் வருகின்ற 15-ம் தேதி தமிழகத்திலும் வெளியாக இருக்கிறது கே ஜி எப் படத்தினை போலவே இந்த படம் வெற்றி நடை போடும் என ட்ரீம் வாரியர்ஸ் செம பிளான் ஒன்றை போட்டுள்ளது.

அதாவது கே ஜி எஃப் கே ஜி எஃப் 2 மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் காந்தாரா என்ற திரைப்படத்தையும் தயாரித்து இருக்கிறது‌. இதனைத் தொடர்ந்து ரிஷப் செட்டி என்பவர் இந்த படத்தினை இயக்கியிருக்கிறார்.

இந்த படம் கடந்த 30ஆம் தேதி அன்று வெளியானது கன்னத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்த படத்தினை கர்நாடகாவை தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரம் போன்ற இடங்களிலும் இந்த படத்தினை பற்றி பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காந்தாரா படத்தினை தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்காக முடிவு செய்துள்ளார்கள்‌.

மேலும் கே ஜி எஃப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதால் தமிழகத்தில் ட்ரீம் வாரியார் நிறுவனம் சார்பில் எஸ் ஆர் பிரபு வெளியிடுகிறார் இந்த சுமார் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.