காந்தரா, கேஜிஎப் படத்தை அட்ட காபி அடித்த திரைபடம்.! இதுல இரண்டாம் பாகமும் இருக்கா.?

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்று வந்தது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகர் யாஷ். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகிய நிலையில் இந்த இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் விஜயின் பீஸ்ட் திரைப்படத்திற்கு போட்டியாக கேஜிஎப் 2 திரைப்படம் வெளியானது. பீஸ்ட்டைவிட கே ஜி எஃப் 2 திரைப்படம் வசூலில் வாரி குவித்தது. அந்த அளவிற்கு கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கேஜிஎப் படத்தின் மூன்றாவது பாகம் உருவாக உள்ளது விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கன்னட திரைப்படத்தில் ஒரு திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை கண்டமேணிக்கு கொடுத்து வருகிறார்கள்.

அதாவது கன்னட மொழியில் நேற்று வெளியான கப்ஜா என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தில் பல வில்லன்கள் நடித்து இருந்தாலும் ஒருவர் கூட மனதில் நிற்கும் அளவிற்கு நடிக்கவில்லை அது மட்டுமல்லாமல் இது முழுக்க முழுக்க கேஜிஎப் மற்றும் காந்தாரா படத்தை போல் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இது முழுக்க முழுக்க கேஜிஎப் படத்தின் அட்டகாபி தான் கப்ஜா திரைப்படம் என கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள் இதனை தொடர்ந்து கதை இசை கிளைமாக்ஸ் டயலாக் என அனைத்துமே கேஜிஎப் படத்தின் காபி தான் என கூறி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படம் இவ்வளவு கேவலமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வேற உருவாக இருப்பதாக கூறுகிறார்கள் அது மட்டுமல்லாமல் இரண்டாவது பாகத்தில் இன்னும் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் பீதியில் இருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

Leave a Comment