ரத்த மழையில் ரிஷப் ஷெட்டி.. வெளியானது காந்தாரா தி லெஜண்ட் படத்தின் டீசர்

Kantra the Legend : நல்ல படங்களுக்கு எப்பொழுதுமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் கன்னட படங்கள் தற்போது வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன கே ஜி எஃப், கே ஜி எஃப் 2 படங்களை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் தான் காந்தாரா.

சின்ன பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து Sapthami gowda, கிஷோர், மானசி சுதீர், ஷின் ஷெட்டி, prakash thuninad மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.  படம் கன்னடத்தில் சக்க போடு போட்டது பிற மாநில தமிழ், ஆந்திரா போன்ற இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி நல்ல வசூலை பதிவு செய்தது.

நிக்சனின் கேப்டன்சிக்கு பிக் பாஸ் வைத்த ஆப்பு.! நேரடி நாமினேஷன்.. குத்த போகும் சூனியக்காரிகள்

அதனை தொடர்ந்து காந்தாரா 2 படம் வெளியாகும் என ரிஷப் ஷெட்டி கூறிய நிலையில் சிறு இடைவெளிக்கு பிறகு தற்பொழுது படம் அதிரடியாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார்.

125 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது டீசரில் ரிஷப் ஷெட்டி முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் பார்ப்பதற்கு மிகக் கொடூரமாக இருக்கிறார். இதையெல்லாம் வைத்த பார்த்தாலே படத்தில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.

இறுதிச்சுற்று இவருடைய கதையா.? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. சுதா கொங்கராவை வெளுத்து விடும் ரசிகர்கள்

அதே சமயம் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. First Look டீசரை பார்த்த பலரும் வேற லெவல் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.  இதோ நடிகர் ரிஷப் ஷெட்டி மிரட்டும் காந்தாரா தி லெஜன்ட் டீசரை நீங்களே பாருங்கள்..