நிக்சனின் கேப்டன்சிக்கு பிக் பாஸ் வைத்த ஆப்பு.! நேரடி நாமினேஷன்.. குத்த போகும் சூனியக்காரிகள்

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 56 நாட்களை நிறைவு செய்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சில திடீர் திருப்பங்கள் இருந்து வருகிறது. அப்படி ஏற்கனவே வைல்ட் கார்டில் ஐந்து பேர் என்ட்ரி கொடுத்ததால் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் பதறி போனார்கள். எனவே அதன் பிறகு வைல்ட் கார்டில் வந்த ஐந்து பேரையும் டார்கெட் செய்து வச்சு செய்ததால் ஏஜென்ட் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

இறுதிச்சுற்று இவருடைய கதையா.? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. சுதா கொங்கராவை வெளுத்து விடும் ரசிகர்கள்

இதனை அடுத்து நேற்று அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா இருவரும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்கள் வந்தவுடன் தொடர்ந்து ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தங்களுடைய அறிவுரைகளை கூறிவரும் நிலையில் இதனால் சிலர் உச்சகட்ட பயத்தில் இருக்கிறார்கள். அப்படி பூர்ணிமா ஏற்கனவே தான் என்ன பேசினாலும் வெளியில் தப்பா தான் போவதாக நினைத்து வந்தார்.

அதுவும் தற்பொழுது உறுதியாகி இருக்கிறது வெளியில் சென்றாலும் பரவாயில்லை ஆனால் இந்த பெயருடன் வெளியில் தான் போக கூடாது என நினைத்து வருகிறார். இதனை அடுத்து இந்த வார கேப்டனாக நிக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இவருடைய கேப்டன்சிக்கு பிக் பாஸ் ஆப்பு வைத்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அரங்கேறிய ஓப்பன் நாமினேஷன்.. பூர்ணிமாவை நாமினேட் செய்த மாயா ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ் – வெளியான ப்ரோமோ

அப்படி தற்பொழுது வெளியாகியிருக்கும் இன்றைய முதல் ப்ரோமோவில் லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாரத்தின் கேப்டன் நிக்சன் தனக்கு அநீதி இழைக்கப்பட்ட உள்ளதாக யாராவது நினைத்தால் நியாயம் கேட்டு இந்த மணியை அடிக்கலாம் என்று பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் நிக்சன் மீதான புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கேப்டன் பதவி பறிக்கப்படும் என்றும் அதோடு மட்டுமல்லாமல் இந்த வார நேரடி நாமினேஷன் செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல பூர்ணிமாவும் மாயாவும் நிக்சனை நாமினேஷன் செய்ய வேண்டும் என திட்டம் போட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்