அஜித்தை தூக்கி விட்டு ஆசை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இயக்குனர் வசந்த் இயக்குனர் வசந்த் வெளிப்படை

Ajith Kumar: கோலிவுட் திரைவுலகில் டாப் ஹீரோவாக கலக்கி வரும் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமார் தற்பொழுது விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஆசை திரைப்படத்தில் முதலில் வேறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்துள்ளார். அந்த நடிகர் நிராகரிக்க பிறகு அஜித் இப்படத்தில் நடித்தாராம்.

காமெடி நடிகர் பாண்டுவை ஞாபகம் இருக்கிறதா.! அட அவரின் மகனும் ஒரு நடிகரா.?

1990ஆம் ஆண்டு வெளியான என் கணவர் என் வீடு என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்க அஜித் பிறக அமராவதி திரைப்படத்தில் ஹீரோவாக அவதாரம் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து பல போராட்டங்களுக்குப் பிறகு ராஜாவின் பார்வையிலேயே, பவித்ரா போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த படங்கள் சரியாக போகவில்லை எனவே சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான ஆசை பட வாய்ப்பை பெற்றார். இப்படம் எதிர்பாராத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அஜித்தின் திரைவுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைய இதன் மூலம் கிடைத்த வெற்றியினால் வான்மதி, கல்லூரி வாசம், மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி போன்ற பல திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

சவால் விட்ட சரஸ்வதிக்கு ஜெயிலில் பயத்தை காட்டப் போகும் அர்ஜுன்.! கையால் ஆகாதவராய் நிற்கும் தமிழ்.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

அஜித் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியாகி நல்ல லாபத்தை கொடுத்த திரைப்படம் தான் ஆசை. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சுபலட்சுமி, ரோகினி, பிரகாஷ்ராஜ், வடிவேலு, நிழல்கள் ரவி, பூரணம் விஸ்வநாதன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் முதலில் வசந்த் ஹீரோவாக நடிக்க வைக்க நடிகர் சூர்யாவை தான் அனுப்பிவுள்ளார். ஆனால் சூர்யா பிசினஸில் பிஸியாக இருந்ததால் ஆசை படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். எனவே அமராவதி படத்தை பார்த்த வசந்த் பிறகு அஜித்தை அணுகி இப்படத்தினை இயக்கியுள்ளார்.