இந்த வருடமும் என் ஆட்டம் தான் டிஆர்பி-யில் மாஸ் காட்ட 6 முக்கிய படங்களை கண்ட்ரோலுக்குள் கொண்டு வந்த சன் டிவி..! அட லிஸ்டில் ரஜினி, அஜித் படம் இருக்கா…

Sun TV: கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியான ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அப்படி ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ வசூல் ரீதியாக சாதனை படைத்தது . இவ்வாறு கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வர காத்திருக்கிறது.

அந்த படங்களின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி இருக்கும் நிலையில் எந்தெந்த புதிய திரைப்படங்களை சன் டிவி கைப்பற்றியுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு லால் சலாம் மற்றும் வேட்டையன் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கிறது. இந்த படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் கைப்பற்றியுள்ளார்.

thalapathy 68 : GOAT -ல் விஜய் லுக் பாத்திங்க நம்ம ப்ளே பாய் பிரஷாந்த் லுக்கை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் விஜய் நடித்துவரும் தளபதி 68 படமான GOAT படத்தையும் சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தனுஷ் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த ஆண்டு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை சன் டிவி கைப்பற்றி இருக்கும் நிலையில் கண்டிப்பாக டிஆர்பி ரேட்டிங் ஜாக்பாட் அடிக்க உள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களையும் குடும்பத்தினர்கள் பார்த்து வருகின்றனர்.

ரசிகர்களின் “கனவு ராணி” தொடைழகி ரம்பா சினிமாவிற்கு வந்த புதிதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்

எனவே சீரியலில் கலக்கி வரும் சன் டிவி தற்போது முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்களையும் கைப்பற்றியுள்ளது. இவ்வாறு இதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடுகிறது.