GOAT MOVIE: நியூ இயர் ஸ்பெஷலாக விஜய் நடித்த வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இப்படத்திற்கு டி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என அறிவிக்கப்பட்ட இரண்டு போஸ்டர்களுடன் GOAT டைட்டில் வெளியானது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
முதன்முறையாக விஜய்-வெங்கட் பிரபு கூட்டணி இணைந்திருக்கும் நிலையில் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். GOAT படம் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இப்படத்தில் வெங்கட் பிரபு என்ன ட்விஸ்ட் வைத்துள்ளார் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்யின் போஸ்டர்கள் மட்டுமே டைட்டிலுடன் அறிவிக்கப்பட்டது இதில் விஜய் அப்பா, மகள் என இரட்டை கேரக்டரில் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மேலும் GOAT படத்தில் சீனியர் நடிகர்களும் நடித்து வருகிறார்கள் அதாவது 1980களில் மாஸ் காட்டிய மோகன், 1990களில் பெண்களின் மனதை கவர்ந்த கனவு நாயகன் பிரசாந்த், நடன புயல் பிரபுதேவா ஆகியோர்கள் விஜய்க்கு இப்படத்தில் டாப் கொடுக்க உள்ளனர்.
விஜய் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் எல்லாம் பிரசாந்த் பிசியான ஹீரோவாக இருந்து வந்தார் எனவே GOAT படத்தில் பிரசாந்திற்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது அப்படி முதன்முறையாக பிரசாந்தின் லுக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
GOAT படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் பிரசாந்துடன் பிரபுதேவா இருக்கும் போட்டோ இணையதளத்தில் லீக் ஆகி உள்ளது இதில் பிரசாந்த் கொஞ்சம் நீளமான முடிவுடன் பிரபுதேவா அவரது ட்ரேட் மார்க் ஹேர் ஸ்டைல் உடன் போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு வில்லனாக பிரசாந்த் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.
Prashanth With Prabhu Deva #TheGreatestOfAllTime 👍😎 pic.twitter.com/zJsQrtfwQm
— Venkat Prabhu (@vp_0ffl) January 3, 2024