முத்து படத்தில் ரஜினி அழைத்தும் நடிக்க மறுத்த பிரபலம்..! இரண்டு முறை சூப்பர் ஸ்டார் அழைத்தும் வேண்டாம் என கூறி அவமானப்படுத்தினாரா…?

pepsi uma reject rajini movie chance : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது சில புகைப்படங்களும் வெளியானது..

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பிரச்சனை போய்க்கொண்டிருந்த நிலையில் அனைவரும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினி தான் என ஒப்பு கொண்டார்கள். ஆனாலும் இன்னும் ட்விட்டரில் சண்டை ஓய்ந்த பாடில்லை ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் வந்து கொண்டு தான் இருக்கிறது.

புத்தாண்டில் நடனமாடி குடும்பத்துடன் கொண்டாடிய அஜித்.. வைரலாகும் வீடியோ..

கடைசியாக ரம்பாவின் பேட்டியை வைத்து ரஜினியை ட்ரோல் செய்து வந்தார்கள் அதாவது அருணாச்சலம் திரைப்படத்தின் ஷூட்டிங் பொழுது ரஜினியை கட்டிப்பிடிக்காததால் அவர் ஜாலியாக கோபமானதாகவும் அதுமட்டுமில்லாமல் திடீரென வந்து தன்னுடைய பின்னால் தட்டி விளையாடுவது குறித்தும் ரம்பா பேசியிருந்தார்.

ஆனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு திடீரென இந்த வீடியோ வைரலாகி வந்தது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக பெப்சி உமா பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது அதில் ரஜினி சார் என்னை முத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் எல்லோருமே ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஆசைப்படுவார்கள் ஆனால் தனக்கு அந்த வாய்ப்பு இரண்டு முறை வந்த பொழுதும் நான் அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டேன்.

கமலின் “இந்தியன் 2” உரிமத்தை வாங்கிய பிரபல ஓடிடி, தொலைக்காட்சி.. வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

அப்பொழுதும் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நான் கூப்பிடும் மாட்டீங்கன்னு சொல்லிட்டாங்களா என ரஜினி கலாய்த்ததாக பெப்சி உமா கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் எத்தனை பேருடன் நின்று கொண்டிருந்தாலும் என்னுடைய பார்வை எல்லாம் உங்கள் மேல் தான் இருக்கும் எனவும் ரஜினியே கூறியதாக பெப்சி உமா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார்கள் பெப்சி உமா சன் தொலைக்காட்சியில் 1990களில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது..