இலங்கையில் யாருக்கு வெற்றி.. ஜெயிலர், லியோ இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : சினிமா உலகப் பொருத்தவரை ஒரு நடிகரின் படத்தின் வசூலை இன்னொரு நடிகரின் படத்தின் வசூல் முறியடிப்பது வழக்கம் அந்த வகையில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படம் அண்மையில் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி  உள்ளது இந்த படத்தின் வசூலை விஜயின் லியோ திரைப்படம் முறியடிக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்பொழுது நிலவரப்படி ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வில்லை என்றாலும் கிட்டத்தட்ட லியோ படம் நெருங்கி உள்ளது லியோ திரைப்படம் இதுவரை மட்டுமே உலக அளவில் சுமார் 565 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இதுவும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.

வந்த வேகத்தில் வெளியேறிய அன்னபாரதி 7 நாட்களுக்கு வாங்கிய சம்பளம்.. கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய விஜய் டிவி

லியோ படத்துக்கு தமிழையும் தாண்டி கேரளா, கர்நாடகா வெளிநாடுகளிலும் லியோ படம் நல்ல வசூலை அள்ளி உள்ளது அந்த வகையில் இலங்கையிலும் தொடர்ந்து லியோ படத்திற்கு நல்ல வசூல் வந்த வண்ணமே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இலங்கையில் ஜெயிலர் படத்தின் வசூலை ..

லியோ முறியடித்ததா.? இல்லையா.? என்பது குறித்து  விலாவாரியாக பார்ப்போம்.. லியோ திரைப்படம் இலங்கையில் இதுவரை சுமார் 17.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இலங்கையில் சுமார் 20.5 கோடி வசூல் செய்துள்ளது.

Leo : வெற்றி விழா முடிஞ்சிடுச்சு.. அடுத்து பார்ட்டி..! எங்கு தெரியுமா.?

இந்திய மதிப்பில் ஜெயிலர் திரைப்படம் அங்கு சுமார் 5.5 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க முடியாமல் லியோ தடுமாறி வருகிறது என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..