வந்த வேகத்தில் வெளியேறிய அன்னபாரதி 7 நாட்களுக்கு வாங்கிய சம்பளம்.. கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய விஜய் டிவி

Bigg Boss season 7: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஒரு மாதத்தை கடந்திருக்கும் நிலையில் வாரம் தோறும் ஞாயிறு கிழமை அன்று ஏதாவது ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய அன்ன பாரதி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களில் ஒருவர்தான் அன்ன பாரதி. சென்ற முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டை வெளியேறியுள்ளார். மேலும் கடந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கும் அனுப்பப்பட்ட நிலையில் பெரிதாக விளையாட முடியாத அன்ன பாரதியை ஒரே வாரத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்.. பிரசன்ஸ் ஆப் மைண்ட் விஜய் கிட்ட இல்லை – பகீர் கிளப்பிய பிரபலம்

கடந்த வார கேப்டன் ஆன பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்களான ஐந்து பேருடன் விசித்ராவையும் சேர்த்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு அனைத்து போட்டியாளர்களுக்கும் சமைத்து தர வேண்டிய வேலை, வீட்டு வேலைகள் என வேலைகளைப் பார்த்து வந்ததால் டாஸ்க் விளையாட முடியாமல் போனது.

இதனால் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி எந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் செய்யவில்லை. இதனை அடுத்து இவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்காக ஒரு நாளைக்கு ரூபாய் 20000 சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆணவத்தின் உச்சத்தில் பிக் பாஸ் மாயா.! தினேஷிடம் ஆர்டர் போடும் வெத்து வெட்டு ஐஷு.. பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ

எனவே பிக் பாஸ் வீட்டில் 7 நாட்கள் அன்ன பாரதி இருந்திருக்கும் நிலையில் மொத்தமாக ரூபாய் ஒரு 10,4000 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளாராம். பிக் பாஸ் வீட்டில் ஒன்றாக பழகும் வாய்ப்பை கூட பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் கொடுக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.