முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்.. பிரசன்ஸ் ஆப் மைண்ட் விஜய் கிட்ட இல்லை – பகீர் கிளப்பிய பிரபலம்

Vijay : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் நடித்தார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்த “தளபதி 68” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா போன்ற 90ஸ் நடிகர், நடிகைகள் நிறைய பேர் நடிக்கின்றனர் அது மட்டுமல்லாமல் பிரேம்ஜி கங்கை அமரன், அரவிந்த், அஜ்மல் அமீர், யோகி பாபு, மைக் மோகன், வி டிவி கணேஷ், மீனாட்சி சௌத்திரி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

ஹீரோயின்கள் ப்ரோபோஸ் செய்து சூப்பர் ஹிட் பெற்ற டாப் 5 தமிழ் படங்கள்.. மொத்த காதலையும் கண்களாலேயே வெளிப்படுத்திய நயன்தாரா

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு  இதற்கு முன் எடுத்த படங்கள் அனைத்துமே என்டர்டைன்மெண்ட் படங்களாக இருந்து உள்ளன. தளபதி 68 படத்தின் பூஜை போடப்பட்டு ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள்  விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது இதில் விஜய் கலந்து கொண்டு குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் விஜய் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

எந்திரன் முதல் லியோ வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.!

நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்.. சரத்குமார் வாரிசு நிகழ்ச்சியில் பேசு இருப்பார் அதே மேடையில் விஜய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம் என்பது எல்லோருடைய கருத்து.. விஜய் இன்ஸ்டன்டா  ஒரு விஷயத்தை பேச சொன்னால் பேச மாட்டார்.

அந்த அளவுக்கு அவரு பிரசன்ஸ் ஆப் மைன்ஸ் கிடையாது.  எல்லாத்தையுமே அவர் ஸ்கிரிப்டா தான்  பண்ணுவாரு.. அப்படி திரையில் வசனம் பேசி பேசி பழகினாரோ.. அதேபோல் தான் எல்லா விஷயத்தையும் எடுக்கிறார் என அந்த நான் பேசி உள்ளார்.