ஹீரோயின்கள் ப்ரோபோஸ் செய்து சூப்பர் ஹிட் பெற்ற டாப் 5 தமிழ் படங்கள்.. மொத்த காதலையும் கண்களாலேயே வெளிப்படுத்திய நயன்தாரா

Tamil Movies: பொதுவாக தமிழ் சினிமா என்றாலே படங்களில் ஹீரோ தான் ஹீரோயின்களுக்கு ப்ரொபோஸ் செய்வது வழக்கம். ஆனால் ஒரு சில படங்களில் ஹீரோயின்களும் ஹீரோக்களுக்கு ப்ரொபோஸ் செய்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் ஹீரோயின்கள் ஹீரோக்களுக்கு ப்ரொபோஸ் செய்த டாப் 5 படங்களின் காட்சிகள் குறித்து பார்க்கலாம்.

தலைவா: விஜய், அமலாபால் இணைந்து நடித்த இப்படத்தில் அமலா பால் விஜய்யிடம் ‘உங்க வாழ்க்கையில நான் அம்மாவாவும் வரலாமா’ என கேட்டிருப்பார் இந்த காட்சி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

எந்திரன் முதல் லியோ வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.!

மெட்ராஸ்: கார்த்திக், கேத்தரின் தெரசா இணைந்து நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்தி உனக்கு என்ன வேண்டும் என கேட்க அதற்கு கேத்தரின் தெரசா ‘நீதான் வேண்டும் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என மிகவும் க்யூட்டாக தனது காதலை வெளிப்படுத்தி இருப்பார் இந்த ப்ரொபோசல் காட்சி நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

அசுரன்: தனுஷ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் பெற்ற அசுரன் படத்தில் அம்மு அபிராமி தனுஷ் இடம் ‘நீ என் பொண்ணு தேடிக்கிட்டே அங்கே இங்கேயும் போற என்னை ஏன் மாமா உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும் தோணல’ என கேட்பார் இந்த சீன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சிங்கர் ஸ்வேதா மோகன் குரலில் வெளியாகி ரசிகர்களின் மனதை வருடிய டாப் 5 பாடல்கள் இதோ.!

மீசைய முறுக்கு: ஹிப் ஹாப் ஆதி ஆத்மிகா இணைந்து நடித்த மீசைய முறுக்கு படத்தில் ‘நானே உன்ன லவ் பண்றேன்னு சொல்றேன்னு வச்சுக்கோ அப்ப இதெல்லாம் மறந்திடுவ தான’ என ஹீரோவுக்கு ஹீரோயின் தனது ப்ரொபோஸ் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பார். இந்த சீன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

தனி ஒருவன்: நயன்தாரா ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் தான் தனி ஒருவன். இதில் நயன்தாரா ஜெயம் ரவியிடம் ப்ரொபோஸ் எல்லாம் பண்ண தெரியாது என தனது மொத்த காதலையும் கண்களால் நயன்தாரா வெளிப்படுத்தி இருப்பார் இந்த காட்சி நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளது.