எந்திரன் முதல் லியோ வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியானால் பெரிய வசூலை அள்ளுவது வழக்கம் அப்படி உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் நடிகரின் படங்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

எந்திரன் : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஷங்கர் உடன் கூட்டணி அமைத்து  எந்திரன் படத்தில் நடித்தார். படம் ஆக்சன், எமோஷனல் என கலந்திருந்தால் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது தமிழையும் தாண்டி உலகளவில் நல்ல வரவேற்பு பெற்றது கலெக்ஷனில் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

கபாலி :  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறமையான இயக்குனர்களுடன் கைகோர்ப்பது வழக்கம் அந்த வகையில் பா. ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்து இந்த படத்தில் நடித்திருந்தார். படத்தில் ராதிகா ஆப்தே,  தன்ஷிகா, ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், ரித்திகா பலர் நடித்திருந்தனர் படம்  தமிழ்நாட்டையும் தாண்டி வெளிநாடுகளில் சக்க போடு போட்டது ஒட்டுமொத்தமாக 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

2.0 : எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து 2.0 வெளியானது இந்த படத்தின் கதை என்னவென்றால்  செல்போன் சிக்னல் டவர்களால் சின்ன சின்ன குருவி உயிரினங்கள் அழிக்கப்படுகிறது என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது படம் ஆக்சன், எமோஷனல் என இருந்ததால் சக்கபோடு போட்டது உலகம் எங்கும் நல்ல வசூலை அள்ளியது.

பிகில்  : அட்லீ, விஜய் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவானது படம் முழுக்க முழுக்க கால்பந்து சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது படம் ஒட்டுமொத்தமாக 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

விக்ரம் : நடிப்பிற்கு பெயர் போன கமல் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து விக்ரம் படத்தில் நடித்தார் இந்த படம் முழுக்க முழுக்க போதை பொருளை ஒழிப்பது சம்பந்தப்பட்ட ஒரு படம் தான் படத்தில் எமோஷனல், ஆக்சன் என இருந்தது கமலுடன் இணைந்து காயத்ரி, பகத் பாசில், விஜய் சேதுபதி, ஷிவானி நாராயணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் உலகம் எங்கும் நல்ல வரவேற்பு பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

பொன்னியின் செல்வன் : நாவல் மற்றும் வரலாற்று கதைகளை படமாக எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் மணிரத்தினம் அப்படி பொன்னியின் செல்வன் நாவலை பல தடவை எடுக்க முயற்சி செய்து தோற்றுப்போன மணிரத்தினம் கடைசியாக லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் உடன் கூட்டணி அமைத்து பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்தார் நீளமாக இருந்த காரணங்களால் இரண்டு பாகங்களாக வெளியானது முதல் பாகம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று 450 கோடிக்கு  கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

பொன்னியின் செல்வன் 2  : பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களிலேயே பார்ட் 2 வெளியாகிறது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பெரிய வசூலை பதிவு செய்தது.

வாரிசு : தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப திரைப்படமாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

துணிவு : அஜித் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் மோசடிகளை அப்பட்டமாக எடுத்து சொன்னது. அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடிய பெரிய வசூலை அள்ளியது.

ஜெயிலர் : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து மொத்த வில்லன்களையும் இவர் கொள்வார் கடைசியில் பார்த்தார் மெயின் வில்லனையே அவருடைய பையன் தான் இதை தெரிந்து கடைசியில் அவரையும் கொள்ளுவார் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது பெரிய வசூலை பதிவு செய்தது.

லியோ : லோகேஷ் விஜய் இணையும் படங்கள் எப்பொழுதுமே வெற்றி படங்கள் தான் அந்த வகையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ படத்தில் இணைந்தனர் இந்த படம்  பெரிய வசூலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.