சிங்கர் ஸ்வேதா மோகன் குரலில் வெளியாகி ரசிகர்களின் மனதை வருடிய டாப் 5 பாடல்கள் இதோ.!

Singer: பாடகி ஸ்வேதா மோகன் பாடிய ஐந்து சூப்பர் ஹிட் பாடல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் பாடிவரும் ஸ்வேதா மோகன் 50 மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். இவருடைய அழகான குரலில் வெளியாகும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அப்படி இவர் பாடிய ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 5 பாடல்கள் குறித்து பார்க்கலாம்.

மெர்சல்: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ஸ்வேதா மோகன் பாடிய ‘உன் ஹார்ட்க்குள்ள நான் பிரைவேட் ஆயிட்டேன்’  இந்த பாடல் 5வது இடத்தை பிடித்துள்ளது.

3: தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான 3 படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்று இருந்த ‘இது போதுமா இதில் அவசரமா’ பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார் இப்பாடல் 4வது இடத்தை பிடித்துள்ளது.

கடல் மீனுக்கு நீச்சல் பழக வேண்டுமா என்ன.? வடிவேலு மீம்ஸ் வீடியோவை பதிவிட்டு நன்றி சொன்ன பிரதீப்.!

மரியான்: ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தா தான் என்ன’ பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்த நிலையில் இப்பாடல் 3வது இடத்தை பிடித்துள்ளது.

தங்க மகன்: தனுஷ் சமந்தா நடிப்பில் வெளியான தங்க மகன் படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘என்ன சொல்ல ஏது சொல்ல’ பாடலை ஸ்வேதா மோகன் பாடிய நிலையில் இப்பாடல் 3வது இடத்தை பிடித்துள்ளது.

ஜவான் கெட்டப்பில் கமல்.. வெளியானது KH 234 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அம்பிகாபதி: ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படத்தில் இடம் பெற்றிருந்த ‘இக்கலா ரசிகா’ பாடலை பாடியவர் ஸ்வேதா மோகன் தான் இப்பாடல் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.