கடல் மீனுக்கு நீச்சல் பழக வேண்டுமா என்ன.? வடிவேலு மீம்ஸ் வீடியோவை பதிவிட்டு நன்றி சொன்ன பிரதீப்.!

Bigg Boss Pradeep Antony: பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் வடிவேலு காமெடி வீடியோவை பதிவு செய்து தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வந்தது.

ஆனால் பிக் பாஸ் ஹவுஸ் மெட்ஸ்கள் அனைவரும் சேர்ந்து பிரதீப்பை ரெட் கார்ட் மூலம் வெளியில் அனுப்பி வைத்துள்ளனர். பிரதீப் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், எல்லை மீறி செயல்பட்டதாகவும், அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தது.

ஜவான் கெட்டப்பில் கமல்.. வெளியானது KH 234 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பிக் பாஸ் நிர்வாகம் ஹவுஸ் மேட்ஸ்களின் வலியுறுத்தலின் பெயரில் ரெட் கார்டு கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் மற்றும் கமல் உள்ளிட்ட அனைவரையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் பிரதீப் சமீபத்தில் ரெட் கார்டுடன் தான் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.

அதிகாலையிலேயே பாட்டிலும் கையுமாக ராதாரவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி.? கனிந்த பழம் தானே விழும்..

இதனை அடுத்து சமீபத்தில் காமெடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து ஆதரவுக்கு மிகவும் நன்றி கூட நின்றதற்கு நன்றி என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல நடிகராக முயற்சி செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு டைட்டில் வின்னர் ஆக வரக்கூடிய பிரதீப்பிற்கு அனைவரின் சூழ்ச்சியினால் இவ்வாறு நடந்து இருக்கும் நிலையில் கண்டிப்பாக சினிமாவில் நல்ல நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..