ஜவான் கெட்டப்பில் கமல்.. வெளியானது KH 234 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Kamal : சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு முன்னோடியாக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம். மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஓடி 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் சாதனை படைத்தது.

அந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமலுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. கைவசம் ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம், பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் உலக நாயகன் கமலஹாசன் வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவருகிறது.

திண்ணையில்‌ இருக்கிறவனுக்குத்‌ திடீரென வந்த வாழ்வு.. லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

இது தவிர இந்தியன் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அண்மையில் இந்தியன் 2 intro வீடியோ வெளியானது. இப்படி சினிமா உலகில் பிஸியாக ஓடும் கமலஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார் அப்படி அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

இதையும் உலக நாயகன் கமலஹாசன் சீறும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் உலகநாயகன் கமலஹாசனின் 234 வது படம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விலாவாரியாக பார்போம்..

பாலுக்கு காவல் பூனையா.? லிப் கிஸ் அடிக்கும் நீங்கள் பெண் உரிமை பற்றி பேசலாமா.! ஆவேசப்பட்ட யுகேந்திரனின் மனைவி

அதாவது கமலின் 234 வது படத்தின் டைட்டில் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது இந்த படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதோ அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்களே பாருங்கள்..