ஆணவத்தின் உச்சத்தில் பிக் பாஸ் மாயா.! தினேஷிடம் ஆர்டர் போடும் வெத்து வெட்டு ஐஷு.. பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss season 7 Tamil today promo 2: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஒரு மாதங்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஹவுஸ் மெட்ஸ்களுக்கிடையே ஏராளமான சண்டைகள் நிகழ்ந்து வருகிறது. அதாவது இந்த சீசன் ஸ்மால் பாஸ் வீடு பிக் பாஸ் வீடு என இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது வாரத்தின் தொடக்கத்தில் யார் கடந்த வாரம் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடி வந்தார்களோ அவர்களை கேப்டன் தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.

எனவே ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்கள்  பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் சமைத்துக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கேப்டன் ஆன பூர்ணிமா வைல்ட் கார்டில் வந்த ஐந்து பேருடன் விசித்திராவையும் சேர்த்து ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

எனவே இதனால் ஓவர் ஆட்டம் போட்டு வந்த நிலையில் கமல்ஹாசன் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ரெட் கார்ட் கொடுத்து பிரதீப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு மிகவும் கடுப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் இந்த வாரம் கேப்டனாக மாயா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் எனவே என்னவெல்லாம் கூத்து நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்த்துக்க வேண்டும். அப்படி முதல் கட்டமாக தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஏழு பேருக்கு டீ போட்டு தருமாறு மணி அடிக்கிறார்.

அந்த நேரத்தில் தினேஷ் பில்ல காட்டுங்க என மாயாவிடம் கேட்க அதற்கு நான் காட்ட முடியாதுங்க நீங்க யாரு என பேசிவிட்டு விசித்ரா டீ போடுங்க என ஆர்டர் போடுகிறார். அர்ச்சனா ஐஷூ, நிக்சனிடம் சொல்ற வேலையை செய்ங்கனா என்ன அர்த்தம் எங்களுக்கு ஆர்டர் போடுறீங்களா என கேட்கிறார்.

தினேஷ் கேப்டன் என்ன வேணாலும் பண்ணலாம் என்ற லைனு எங்க கிட்ட இருக்கு எனக் கூற பில்ல காட்டணும்னு எந்த அவசியமும் இல்ல நீங்க டீய போடுங்க நீங்க எல்லாம் சம்பந்தமே இல்லாம பேசுறீங்க என ஐஷூ கூற மறுபுறம் டேய் மணி வேட்டை ஆரம்ப போல என விஷ்ணு கூறுகிறார்.