Leo : வெற்றி விழா முடிஞ்சிடுச்சு.. அடுத்து பார்ட்டி..! எங்கு தெரியுமா.?

Leo : தளபதி விஜய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் பீஸ்ட், வாரிசு படங்களை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான்..

கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர் படம் அதிக ஆக்சன், எமோஷனல் என இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருபினும் படம் கிட்டத்தட்ட சுமார் 560 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வந்த வேகத்தில் வெளியேறிய அன்னபாரதி 7 நாட்களுக்கு வாங்கிய சம்பளம்.. கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய விஜய் டிவி

தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களில் நல்ல வசூலை அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை அள்ளியாதால் லியோ டீம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழாவை நடத்தியது இதில் விஜய் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல மேடை ஏறிய விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார் இந்த படத்தின் வெற்றி விழாவை தொடர்ந்து விஜய் விறுவிறுப்பாக தளபதிய 68 படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு படமாக உருவாகி வருகிறது காரணம் விஜயுடன் இணைந்து 90ஸ் நடிகர், நடிகைகளான லைலா, சினேகா,  மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் உன்னிடம் தோற்றுப் போகிறேன்.. நடிகை சமந்தாவின் Latest click

இப்படி இருக்கின்ற நிலையில் லியோ வெற்றி விழாவை தொடர்ந்து லியோ சக்சஸ் பார்ட்டி நடக்க இருக்கிறதாம் விஜய் தற்பொழுது தளபதி 68 பாடத்திற்காக பாங்காக்கில் இருக்கிறார். வெகு விரைவிலேயே லியோ படக்குழுவை அங்கே அழைத்து பார்ட்டி வைக்க திட்டமிட்டு இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.