விஜயகாந்த்-ராவுத்தர் நட்பை படமாக்க போவதாக மகன் பேட்டி.! இவர்களுடைய பிரிவு குறித்து உண்மை தகவல்

Captain Vijayakanth: விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் நட்பை திரைப்படமாக எடுக்கப் போவதாக அவருடைய மகன் தெரிவித்துள்ள தகவல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தருக்கும் இடையேயான நட்பு பலராலும் பேசப்பட்டு வருகிறது. இப்ராஹிம் ராவுத்தர் என்ன சொல்கிறாரோ அதனை கேட்டு நடக்கக் கூடியவர் தான் விஜயகாந்த்.

தனி சாம்ராஜ்யமே நடத்திய இவர்கள் மதங்களைக் கடந்த மனிதநேயமாக இவர்களுடைய நட்பு இருந்து வருகிறது. இவ்வாறு விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு இந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததால் தள்ளி நின்றார்கள் தற்பொழுது இருவருமே இல்லை.

விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு இப்ராஹிம் ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் நட்பு குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. ராவுத்தர் மகன் சில நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் உடல்நிலை சரியில்லாத பொழுது நான் போய் பார்க்கவே இல்லை அவரது வீடியோவை பார்க்கும் பொழுது நான் உடைந்து போய்விட்டேன் அவரை நேரில் சந்திக்கும் தைரியம் எனக்கு இல்லை ஆகவே போகவே இல்லை. நான் போய் இருக்க வேண்டும் அது என் தவறுதான் அதை நியாயப்படுத்த விரும்பவில்லை என்று இப்ராஹிம் ராவுத்தர் மகன் முகமது அபுபக்கர் தெரிவித்தார்.

விஜய்யின் GOAT படத்தின் கதை இதுவா? வெங்கட் பிரபுவின் ஒன் லைன் ஸ்டோரி.. சோசியல் மீடியாவை தெறிக்க விடும் ரசிகர்கள்

மேலும் இரண்டு பேரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தான் அந்த நட்புக்கு காரணம். இருவரும் உண்மையாக பழகினார்கள் அதில் கொஞ்சம் கூட சுயநலம் இருக்கவில்லை அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்து போனார்கள் ஆனால் சண்டை எதுவும் போட்டுக் கொண்டதில்லை எதிரியாக இருக்கவில்லை ஒரு கட்டத்திற்கு பின் பிரிந்து இருப்போம் என்று முடிவு எடுத்து பிரிந்து போனார்கள் விஜயகாந்த் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் மாறி மாறி ஆட்கள் வேலை செய்தார்கள் எங்கள் கம்பெனியில் உள்ள டிரைவர் அவர் வீட்டுக்கும் டிரைவர் ஆக இருந்தார்.

அங்கு வேலை இல்லாத பொழுது எங்கள் கம்பெனிக்கு வருவார்கள் அப்பாவும் கேப்டனும் பிரிந்தார்களே தவிர பணியாட்கள் அப்படியே தான் இருந்தார்கள். இவர்களுக்குள் எந்த பிரிவும் வந்ததில்லை அப்பாவும் கேப்டனும் பிரிவதற்கு காரணம் அவர்களுக்கு எந்த சண்டையும் இல்லை அவர் அரசியலுக்கு வந்த பிறகு அப்பா கருத்து வேறுபாடு இருந்தது ஆகவே அவர் அமைதியாக இருந்து விட்டார்.

கேப்டன் விருப்பம் என்னவோ அதன்படி அவர் இருந்தார் விலகிய பிறகு கூட அப்பா கேப்டனை பற்றி விசாரித்து கொண்டு தான் இருந்தார் அவர் ஒழுக்கமாக உடற்பயிற்சி செய்கிறாரா? உடல் நலத்தில் அக்கறை காட்டுகிறாரா? என அங்கிருந்து வரும் நபர்களிடம் கேட்டுக் கொண்டே தான் இருந்தார் கேப்டன் அப்பாவை விசாரித்துக் கொண்டுதான் இருந்தார் கடைசி வரை அந்த விசாரிப்பு இருவருக்கும் இடையே இருந்தது அடிக்கடி எங்கள் மேனேஜரிடம் போன் பண்ணி கேப்டன் விசாரிப்பார் அப்பா மருத்துவமனையில் இருந்த போது கூட விசாரித்துக் கொண்டே இருந்தார். மருத்துவமனைக்கு வந்தார் அப்பாவுக்கு சுய நினைவு இல்லை ஆனால் விஜி வந்திருக்கிறேன் விஜி வந்திருக்கிறேன் என்று அப்பா பக்கத்தில் உட்கார்ந்து அழுதார்.

நான் கூட அப்பா உங்க பிரண்டு வந்திருக்கிறார் பேசுங்கப்பா என்று சொன்னேன் அவரால் கேட்க முடிந்தது ஆனால் பேச முடியவில்லை அவரது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை மருத்துவர்கள் கூட கேப்டன் பேச்சுக்கு உங்கள் அப்பா ரெஸ்பான்ஸ் செய்கிறார். தைரியமாக இருங்கள் அவரைக் காப்பாற்றி விடலாம் என்று சொன்னார்கள் மறுநாள் அப்பா மறைந்து விட்டார்.

youtube-பை அதிரவிட்ட தமிழ் பாடல்.. டாப் 10 லிஸ்டில் முதலிடத்தில் எது தெரியுமா.?

உடனே கேப்டன் வந்தார் கண் கலங்கி நின்றார் அவரால் இந்த இழப்பை ஜீரணிக்க முடியவில்லை அதன் பின்னர் என் கைகளை பிடித்துக் கொண்டு உன் அப்பன் எப்படி உன்னை வளர்த்திருப்பான் என்று எனக்கு தெரியும் ஒழுக்கமாக இரு எதற்கும் பயப்படாதே நன்றாக வருவாய் என்று ஆறுதல் சொன்னார். அதன் பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது அதை டிவியில் பார்த்த பொழுது நான் கண்கலங்கி நின்றேன் அவரது அவர் கை சோல்டர் அளவுக்கு பெரிதாக இருக்கும் அவர் அன்பாக என் கன்னத்தை பிடித்தாலே அது அப்படி வலிக்கும் அந்த அளவுக்கு அவர் பலசாலியாக இருந்தார்.

அந்த உடம்பு எங்கே போனது என்றே தெரியவில்லை நான் பயங்கர குண்டாக இருந்தேன் அவர் சொல்லி தான் சிலம்பம் கற்றுக் கொண்டேன் அவர் அடிக்கடி உடம்பு தான் முக்கியம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவரைப் பார்த்துதான் நான் ஃபைட் கற்றுக் கொண்டேன் எனக்கு அவர்தான் அவ்வளவு பிடிக்கும் நான் அவரை அப்பா என்று தான் அழைப்பேன் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அப்பாவையும் கேப்டனையும் வைத்துக் கற்றுக் கொண்டேன் எங்கள் ராவுத்தர் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் அவருக்கு என்றே தனி இருந்தது பொழுது கேப்டன் அங்கு தான் இருப்பார்.

அப்பாவும் அவரும் ஒன்றாக இங்கே தான் இருப்பார்கள் பலமுறை அவர் மருத்துவமனைக்கு உடல் செக்கப் செய்வதற்காக போவார் மீண்டும் வந்துவிடுவார் இந்த முறை அவர் மருத்துவமனைக்கு போகும்போது அப்படியே திரும்பி விடுவார் என நம்பினேன் ஆனால் அது நடக்கவில்லை மறைவுக் கேட்டு போன பொழுது பிரேமலதா அம்மா கேப்டன் உடலை காட்டி அழுதார் அவரது கண்களை பார்த்தேன் என்னால் பார்க்கவே முடியவில்லை என்றார்.