விஜய்யின் GOAT படத்தின் கதை இதுவா? வெங்கட் பிரபுவின் ஒன் லைன் ஸ்டோரி.. சோசியல் மீடியாவை தெறிக்க விடும் ரசிகர்கள்

Vijay Goat Movie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்திற்கான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவனா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

தாய்லாந்த், துருக்கி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தளபதி 68 பாடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் கூடிய டைட்டில் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி தளபதி 68 படத்திற்கு GOAT என பெயர் வைத்துள்ளனர் மேலும் இதில் விஜய் அப்பா, மகன் என இரட்டை கேரக்டரில் நடிப்பதும் தெரியவந்துள்ளது.

youtube-பை அதிரவிட்ட தமிழ் பாடல்.. டாப் 10 லிஸ்டில் முதலிடத்தில் எது தெரியுமா.?

இதனை அடுத்து செகண்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6 மணி அளவில் வெளியானது அதில் இரட்டை கேரக்டர் நடிக்கும் விஜய் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளிடம் பெற்றது. தற்பொழுது GOAT படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

goat movie second look
goat movie 

அதாவது பேட்டி ஒன்றில் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கும் ஆன்லைன் ஸ்டோரி வைரலாகி வரும் நிலையில் அதே போல் இடது பக்கம் இருக்கும் விஜய் விண்வெளிக்கு செல்லும் முன்பும் வலது புறம் இருக்கும் விஜய் விண்வெளியில் இருந்து வந்த பின்பும் என்பது போல கூறப்படுகிறது.

2000 பணம் கொடுத்து மீனாவை முழு வேலைக்காரியாக மாற்றிய ஸ்ருதி.. கோபத்தின் உச்சிக்கே சென்ற முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அந்த போட்டோவில் பேராஷூட் இருக்கிறது பின் அந்த புகைப்படத்தின் கீழ் light can devour darkness but darkness cannot consume the light என குறிப்பிட்டுள்ளது. அதாவது இருளை ஒளியால் விழுங்க முடியும் ஆனால் இருலால் ஒளியை கிரகிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இந்த படம் ஒரு விண்வெளி கதையாக இருக்கும் என்றும் விஜய் விஞ்ஞானியாக நடித்துள்ளார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.