youtube-பை அதிரவிட்ட தமிழ் பாடல்.. டாப் 10 லிஸ்டில் முதலிடத்தில் எது தெரியுமா.?

Top 10 Tamil Songs: பொதுவாக திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் பாடல்களும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து வருகிறது. அப்படி ஏராளமான படத்தின் பாடல்கள் யூடியூப்பில் அதன் பார்வையாளர்களை வைத்து வெற்றியினை கண்டுவிடுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் குறித்து பார்க்கலாம்.

ரஞ்சிதமே: விஜய், ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே என்ற பாடல் இடம் பெற்றது இப்பாடல் யூடியூபில் 149 மில்லியன் பார்வையாளர்களை பெற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

காவாலா: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காவாலா பாடலில் தமன்னாவின் நடனம் பலரையும் கவர்ந்தது. அதன்படி வரிகள் அடங்கிய பாடல் வெளியாகி 220 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ பாடல் 120 மில்லியன் பார்வையாளர்களையும் தாண்டியது.

விசித்ரா படுக்கையறை ரூமுக்குள் புகுந்த நடிகர்.. அய்யய்யோ அவர் ரொம்ப நல்லவர் வக்காலத்து வாங்கும் 80’ஸ் நடிகை..

நான் ரெடிதான்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் லியோ. இப்படத்தில் நான் ரெடி தான் பாடல் யூடியூப்பில் 165 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இப்பாடலை விஜய் மற்றும் அனிருத் இணைந்து பாடினார் இதன் வரிகள் அடங்கிய பாடல் 220 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

ஜிமிக்கி பொண்ணு: விஜய் நடித்த வாரிசு படத்தில் இடம்பெற்ற பாடல் ஜிமிக்கி பொண்ணு. விஜய்யின் நடனத்தினால் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது இந்த பாடலை அனிருத் மற்றும் ஜுனோட காந்தி இணைந்து பாடியுள்ளார்கள்.‌ இப்பாடல் யூடியூபில் 94 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

வா வாத்தி: தனுஷ், சம்யுக்தா நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் இடம்பெற்று இருந்த வா வாத்தி பாடல் யூடியூபில் 135 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது இப்பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்தார்.

ஷுக்கும்: ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடல் வரிகள் வீடியோ வெளியானதும் 11 மில்லியன் பார்வையாளர்களை குவித்தது .அதன் வீடியோ பாடல் 11 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

தீ தளபதி: வாரிசு படத்தில் விஜய்க்காக சிம்பு பாடிய தீ தளபதி பாடல் வீடியோ யூட்யூப்பில் 115 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது அதன் ஒரிஜினல் வீடியோ பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

பெருந்தொகைக்கு விடாமுயற்சி – யை தட்டிச் சென்ற OTT நிறுவனம்.? சாட்டிலைட் உரிமை, இசை ரைட்ஸ் யார் வாங்கினார் தெரியுமா..?

காட்டுமல்லி: காமெடி நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த காட்டு மல்லி பாடலை ஜிவி பிரகாஷ் தங்கையான பவனி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க 72 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது.

சில்லா சில்லா: அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த சில்லா பாடலை எழுதியவர் வைசாக். இப்பாடலை அனிருத் மற்றும் ஜிப்ரான் இணைந்து பாடுகிறார்கள் யூடியூப்பில் இப்பாடல் வரிகள் 60 மில்லியன் பார்வையாளர்களையும் வீடியோ பாடல் 31 மில்லியன் பார்வையாளர்களையும் அள்ளியது.

பேடாஸ்: லியோ படத்தில் இடம்பெற்றிருந்த இந்த பாடல் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது அப்படி இந்த பாடலின் வரிகள் 64 மில்லியன் பார்வையாளர்களையும் வீடியோ 3.4 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்தது.